Canada

மிசிசாகாவில் உள்ள பேஸ்ட்ரி[pastry shop] கடையில் வாகனம் மோதியதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் பாதசாரி ஒருவர்

ஒரு வாகனம் சாலையிலிருந்து வெளியேறி மிசிசாகாவில் உள்ள ஒரு பேஸ்ட்ரி[pastry shop]  கடைக்குள் மோதியதில் 46 வயது பாதசாரி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்

இது  Queen Victory Park Avenue and Lorne Park Road  பகுதியில் காலை 11:25 மணியளவில் நடந்துள்ளது. அந்த நேரத்தில் பாதசாரி பேஸ்ட்ரி கடைக்கு[pastry shop] உள்ளேயும் வெளியேயும் இருந்தாரா என்பது தெளிவாக இல்லை.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிருக்கு ஆபத்தான நிலையில் காயமடைந்த பாதசாரியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் , அத்தோடு வாகனத்தில் இருந்த இருவரையும் முன்னெச்சரிக்கையாக உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக போலீசார் கூறுகின்றனர்.

இச் சம்பவம் தொடர்பாக  தகவல் உள்ளவர்கள்  (905) 453-2121, ext. 3710.  தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  .

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top