News

வேட்பாளர் அறிவிக்கப்பட்ட பின்னரே கூட்டணி! ரணிலுக்கு பங்காளி கட்சிகள் வைத்துள்ள செக்

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் வார இறுதிக்குள் அறிவிக்கப்படுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார். ஜனநாயக தேசியக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளும் இறுதி இணக்கப்பாட்டை எட்டியுள்ள நிலையில், அதன் யாப்பு தொடர்பிலும் முழு உடன்பாடு காணப்பட்டுள்ளது.

இந்த கூட்டணி உடன்படிக்கையில் கைச்சாத்திடுவது மட்டுமே மீதமிருக்கிறது. புதிய கூட்டணியில் கைச்சாத்திடுவதற்கு முன்னர் கூட்டணியின் பிரதான கட்சியான ஐக்கிய தேசிய கட்சி அதன் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்க வேண்டும்.

அதன் பின்னரே கூட்டணிக் கட்சிகள் உடன்படிக்கையில் கைச்சாத்திட முடியுமென உறுதியான முடிவெடுத்திருக்கிறோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஐ.தே.முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் நியமனம் மற்றும் கூட்டணியை அமைக்கும் தினங்கள் தொடர்பான கால அட்டவணையை எதிர்வரும் 31ம் திகதிக்கு முன்னர் வழங்குவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார்.

தீர்க்கமான முடிவுகள் எவையும் எட்டப்படவில்லை. எனினும் ஜனாதிபதி வேட்பாளர் விடயம் தொடர்பாக முக்கிய அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top