Canada

ஸ்டோனி ஏரி படகு விபத்தில் காணாமல் போன நபர் சடலமாக மீட்பு!

பீட்டர்பரோ கவுண்டியில் சனிக்கிழமை இரவு ஏரியில்  இரண்டு படகுகள் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார் , மற்றொருவர் காணவில்லை என அறிவித்த நிலையில் சடலமாக கண்டுஎடுக்கப்பட்டார் .

பீட்டர்பரோ கவுண்டி ஏரியில் இரண்டு படகுகளில் ஆறு பேர் பயணித்துள்ளனர். அங்கு இரண்டு படகுகள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்ற நால்வரையும் காயங்களுடன் மீட்டதாகவும் ,ஒருவர் காணாமல் போயுள்ளதாக ஒன்டாரியோ மாகாண பொலிஸார் தெரிவித்தனர்.

 

 

உயிரிழந்தவர்   பர்லிங்டனைச் சேர்ந்த 31 வயதான கிரிஸ் புருடெக்  என  அறிவிக்கப்பட்டது.காணாமல் போன நபரை OPP மரைன் யூனிட் மற்றும் ஒரு ஹெலிகாப்டரின்  உதவியுடன்   அதிகாரிகள்   கண்டுபிடிக்க முயற்சித்தனர்,

காணாமல் போன நபரை ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியளவில்  இறந்த நிலையில் சடலமாக அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

 

 

“குடும்ப அறிவிப்புகள் நிலுவையில் உள்ள இந்த நேரத்தில் அவரது பெயர் வெளியிடப்படவில்லை” என்று விசாரணையாளர்கள் திங்களன்று தெரிவித்தனர்.
விபத்துக்கான காரணம் விசாரணையில் உள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top