Canada

ரொறன்ரோ பல்கலைக்கழக வளாக கட்டிடத்தில் அம்மோனியா கசிந்ததில் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ரொறன்ரோ   பல்கலைக்கழக  கட்டிடத்தில் அம்மோனியா கசிந்ததைத் தொடர்ந்து இரண்டு பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

ரொறன்ரோ தீ அணைப்பு அதிகாரி  கூறுகையில், 80 செயின்ட் ஜார்ஜ் தெருவில் அமைந்துள்ள லாஷ் மில்லர் கெமிக்கல் ஆய்வகத்திற்கு மதியம் 1:20 மணியளவில் குழுவினர் அழைக்கப்பட்டனர்.

கெமிக்கல் ஆய்வகத்தின் ஒரு அறையில்  அம்மோனியா கசிந்ததைத் தொடர்ந்து கட்டிடம் மூடப்பட்டுள்ளது,

இரண்டு நோயாளிகள் சிறிய காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்று துணை மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கசிவுக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை ஆனால் தீயணைப்பு குழுவினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top