அமெரிக்காவின் மினசொட்டாவில் இடம்பெற்ற துப்பாக்கிதாக்குதலில் மூவர் காயமடைந்துள்ளனர்.

மினசொட்டா மாநிலத்தின் நிகழ்வொன்றில் பெருமளவு மக்கள் திரண்டிருந்தவேளை இந்த துப்பாக்கிபிரயோகம் இடம்பெற்றுள்ளது.

குறிப்பிட்ட கண்காட்சியில் கலந்துகொண்டிருந்த யுவதியொருவர் வாகனமொன்றினால் மோதப்பட்டார் என தெரிவித்துள்ள காவல்துறையினர் குறிப்பிட்ட விபத்தின் பின்னர்  விபத்திற்கு காரணமான வாகனச்சாரதி தனது வாகனத்தை நிறுத்தினார் எனினும் அங்கிருந்தவர்கள் அவரை தாக்கியதை தொடர்ந்து அவர் அங்கிருந்து  விலகிச்சென்றார் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சற்று தொலைவிற்கு சென்ற அவர் அங்கிருந்து காவல்துறையினரை அழைத்து விசாரணைகளிற்கு ஒத்துழைப்பு வழங்கிக்கொண்டிருந்தவேளை பல துப்பாக்கிபிரயோகங்கள் இடம்பெற்றன என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கி சத்தம் கேட்டபகுதிக்கு சென்று பார்த்தவேளை நபர் ஒருவர் துப்பாக்கிசூட்டு காயங்களுடன் காணப்பட்டார்,அதன் பின்னர் மருத்துவமனைக்கு இருவர் காயங்களுடன் வந்துள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

20 மற்றும் 18 வயது  மதிக்கத்தக்கவர்களேசுடப்பட்டுள்ளனர்,பல துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன அனைவருக்கும் ஆபத்தான நிலை காணப்பட்டது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை என தெரிவித்துள்ள  அதிகாரிகள் தாக்குதலை மேற்கொண்ட நபர் குறித்த விபரங்கள் எதுவும் தெரியவரவில்லை என தெரிவித்துள்ளனர்.

குறிப்பிட்ட நிகழ்வில் சுமார் 25,000 பேர் திரண்டிருந்தவேளை  காவல்துறையினரின் கடும் பாதுகாப்பிற்கு மத்தியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்காவில் கடந்த சில வாரங்களாக தொடர் துப்பாக்கிதாக்குதல்கள் இடம்பெற்றுவரும் நிலையிலேயே இந்த சம்பவமும் இடம்பெற்றுள்ளது.