News

அல்பேனியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களால் மக்கள் பீதி – 70 பேர் காயம்

அல்பேனியா நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி பிரித்தானியர்கள் உள்ளிட்ட 70 பேர் காயமடைந்த சம்பவம் வெளியாகியுள்ளது.

ரிக்டர் அளவில் 5.6 என பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தால் குடியிருப்புகள் பல இடிந்து விழுந்துள்ளதாகவும், பயந்துபோன குடியிருப்பாளர்கள் பலர் அலறியடித்து வீதியில் தஞ்சமடைந்துள்ளனர்.கடந்த 30 ஆண்டுகளில் ஏற்பட்ட மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இது என கூறப்படுகிறது.

 

 

கடற்கரை நகரமான Durres-ல் குடியிருப்புகள் பல மிக மோசமாக சேதமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அல்பேனியாவை தாக்கிய இந்த நிலநடுக்கம் இத்தாலி மற்றும் கிரேக்கத்தில் உணரப்பட்டதாகவும், மின் இணைப்புகள் மற்றும் தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டதாகவும், கால்பந்து விளையாட்டு நடந்துகொண்டிருந்த மைதானம் ஒன்று இதனால் சேதமடைந்துள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

 

அல்பேனியாவில் சிறார்கள் உள்ளிட்ட 70 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் உயிர் அபாயம் ஏதும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

 

 

பிரித்தானியரான ஆலிஸ் டெய்லர் தமது 3 மாத குழந்தை மற்றும் கணவருடன் அல்பேனியாவின் Tirana பகுதியில் குடியிருந்து வருகிறார். அவர் கூறுகையில், திடீரென்று பலத்த சத்தம் கேட்டதாகவும், தாம் ஏதோ குண்டுவெடிப்பு என கருதியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

 

பயத்தில் தமது பிள்ளையை அள்ளிக்கொண்டு வீதிக்கு வந்ததாகவும், அப்பகுதி மக்கள் பயத்தில் அலறுவதை தாம் கேட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Latest News

To Top