News

எமது ஆதரவு இன்றி யாரும் ஜனாதிபதியாக வெற்றி பெற முடியாது! மைத்திரி தரப்பு சூளுரை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவு இன்றி எவராலும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்ட முடியாது என கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 68ம் தேசிய மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். >எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுதந்திரக் கட்சியின் ஆதரவு கிடைக்கப் பெறாத எந்தவொரு கட்சியினாலும் 47 வீத வாக்குகளை விடவும் பெற்றுக்கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

47 வீத வாக்குகளை விடவும் பெற்றுக்கொண்டால் அது ஒவ்வொன்னும் சுதந்திரக் கட்சியின் வாக்குகள் என்பதனை நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விழுந்து விழுந்து எழுந்தாலும் வெற்றியீட்டக் கூடிய கட்சியாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top