News

சஜித்திற்கு ரணில் வைத்த பொறி! ரணிலுக்கு எதிராக கூட்டு சேரும் மைத்திரி – மகிந்த?

ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரான தேர்தல் கூட்டணித் ​தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இக்கூட்டணியின் தலைவர் பதவி மஹிந்த ராஜபக்சவுக்கு வழங்கப்படுமெனவும், பொதுச் செயலாளர் பதவி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்குவது தொடர்பிலும் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுவதாக” அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது

இதேவேளை, ஐக்கிய சேசியக் கட்சியின் நிறைவேற்றுக் குழுவை எதிர்வரும் செவ்வாய்க் கிழமை கூட்டுவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதற்கு முன்னர், நிறைவேற்றுக் குழுவிற்கு புதிய உறுப்பினர்களை நியமிப்பதற்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளதாவும், அதற்கான அதிகாரங்கள் அவருக்கு இருப்பதாகவும் சொல்லப்படுகின்றது.

இதன்படி, ஜனாதிபதி வேட்பாளராக பிரதமர் ரணில், அமைச்சர்களான சஜித் மற்றும் தயாகமகே, சபாநயகர் கரு ஜயசூரிய ஆகியோரின் பெயர்கள் முன்வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கொழும்பு ஊடகம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.

இதன் மூலம் பிரதமர் ரணிலுக்கே அதிகளவான ஆதரவு கிடைக்கும் எனவும், பிரதமர் ரணிலின் இந்த செயற்பாட்டினால், சஜித் தரப்பு கடும் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற குழுவையும், நிறைவேற்றுக் குழுவையும் ஒரே நேரத்தில் கூட்ட நடவடிக்கை எடுக்குமாறு சஜித் தரப்பு பிரதமரிடம் கோரிக்கை விடுத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Latest News

To Top