News

சஜித்தை மைத்திரி ஆதரிக்க மாட்டார்! மகிந்த வெளியிட்ட நம்பிக்கை

ஜனாதிபதியின் மனதை மாற்றுவதற்கு சிலர் முற்படுகின்றனர் என எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்கமாட்டார் என தான் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் சஜித் பிரேமதாச களமிறங்கினால் அவரையே சுதந்திரக்கட்சி ஆதரிக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே மகிந்த இவ்வாறு தெரிவித்துள்ளார் “ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக பலமானதொரு கூட்டணியை அமைப்பதில் ஜனாதிபதி உறுதியாக இருக்கிறார். எனவே, அவர் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒருபோதும் ஆதரவு வழங்கமாட்டார்.

எவ்வாறாயினும், ஜனாதிபதியின் மனதை மாற்றுவதற்கு சிலர் முற்படுகின்றனர்” என எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top