News

சவுதி இளவரசிக்கு பத்து மாதங்கள் சிறை தண்டனை!

 சவுதி பட்டத்து இளவரசர் Mohammed bin Salman இன் சகோதரியான இளவரசி Hassa bint Salman இற்கு 10 மாதங்கள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பரிஸில் உள்ள அவரது தந்தையின் வீட்டில் பழுது பார்க்கும் வேலை செய்ய வந்த நபர் தன்னை ஒளிப்படம் எடுத்ததாகக் கூறி தனது காலில் முத்தமிட வைத்ததாக சவுதி இளவரசிக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

இந்தநிலையில் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ள நிலையிலேயே அவருக்கு 10 மாதங்கள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

 

 

எனினும், அதை அவர் உடனடியாக சிறை செல்லத் தேவையில்லை எனவும், தீர்ப்பைத் தொடர்ந்து அவர் நடந்து கொள்ளும் விதத்தின் அடிப்படையில், சிறை செல்லவேண்டுமா அல்லது தண்டனை இரத்து செய்யப்படுமா என்பதை நீதிபதி முடிவு செய்வார் எனவும் கூறப்படுகின்றது.

அத்துடன், இளவரசி Hassa bint Salman இற்கு 10,000 யூரோக்கள் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

Latest News

To Top