News

சிம்பாப்வேயின் முன்னாள் ஜனாதிபதி ரொபர்ட் முகாபே காலமானார்

சுதந்திரத்திற்கு பின்னர் சிம்பாப்வேயின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ரொபர்ட் முகாபே தனது 95 வயதில் இன்று (வெள்ளிக்கழமை ) சிங்கப்பூரில் காலமானார்.

கடந்த ஏப்ரல் முதல் சிங்கப்பூரிலுள்ள மருத்துவமனையொன்றில் அவர் சிகிச்சை பெற்று வந்துள்ள நிலையில் அவர் இன்று உடல்நலக்குறைவு காரணமாக கிச்சை பலனின்றி இயற்கை எய்தியதாக அவரது குடும்பத்தினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

மூன்று தசாப்த காலமாக சிம்பாப்வேயை ஆட்சி செய்த அவர் கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இடம்பெற்ற இராணுவ சதித்திட்டத்தினால் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். சிம்பாப்வேயின்  மூன்றாவது மற்றும் தற்போதைய ஜனாதிபதியாக எம்மெர்சோன் டாம்பூட்ஸ்வ் மனங்ககவா (Emmerson Dambudzo Mnangagwa) பொறுப்பேற்றார்.

இந்நிலையில், சிம்பாப்வேயின் ஜனாதிபதியாக எம்மெர்சோன் டாம்பூட்ஸ்வ் மனங்ககவா, ”சிம்பாப்வேயின் ஸ்தாபக தந்தையும் முன்னாள் ஜனாதிபதியுமான ரொபர்ட் முகாபே காலமானதை நான் அறிவிப்பது மிகுந்த வருத்தத்தோடு தான்’ என்று அவரது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

மேலும், ”எங்கள் தேசம் மற்றும் கண்டத்தின் வரலாற்றில் அவர் செய்த பங்களிப்பு ஒருபோதும் மறக்கப்படாது. அவருடைய ஆன்மா நித்திய அமைதியுடன் ஓய்வெடுக்கட்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

ரொபர்ட் கேப்ரியல் முகாபே 1924 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி ஹராரேவின் வடமேற்கில் உள்ள குட்டாமா மிஷனில் ஒரு கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்தார்.

 

 

இவர் 1980 முதல் 1987 வரை பிரதமராக பதவி வகித்தார். 1960களில் ஆப்பிரிக்காவில் விடுதலைப் போராட்ட வீரராக இருந்த முகாபே, சிம்பாப்வே விடுதலை பெற்று, ஆப்பிரிக்க மக்கள் இவரை கதாநாயகராகப் போற்றினர். அதேநேரம் ஒரு புத்திசாலித்தனமான குழந்தை என்றும் வர்ணிக்கப்பட்டார்.

1998 முதல் பல்வேறு நாடுகள் இவரைக் குற்றம் சாட்டின. இவரின் பொருளாதாரக் கொள்கைகளும், இரண்டாம் கொங்கோ போரில் செலவான குறுக்கிடலும் சிம்பாப்வேயின் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமாயின. 2008இல் இவரின் அரசியல் கட்சி, சிம்பாப்வே ஆப்பிரிக்க தேசிய ஒன்றியம், முதல் தடவை தேர்தலில் மக்களாட்சி மாற்றல் இயக்கம் என்ற எதிர்க் கட்சியிடம் தோற்றது.

கடந்த 2015ம் ஆண்டு எத்தியோப்பியா தலைநகர் ஆடிஸ் ஆபபாவில் நடைபெற்ற ஆப்பிரிக்க யூனியன் மாநாட்டில், ஆப்பிரிக்க யூனியனின் தலைவராக பொறுப்பேற்றார்.

ரொபர்ட் முகாபே கடந்த 2017 ஆம் ஆண்டு இராணுவ சதித்திட்டத்தினால் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அதன்பின்னர் கடந்த 2018ம் ஆண்டு ஜூலை 30ம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், எம்மெர்சோன் மனங்ககவாவை எதிர்த்து எதிர்க்கட்சி தலைவர் நெல்சன் சாமிசா போட்டியிட்டார்.

இந்த தேர்தலில் சுமார் 50 சதவீதம் வாக்குகளை பெற்ற எம்மெர்சோன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதையடுத்து அவர், கடந்த ஆண்டு ஒகஸ்ட் மாதம் 18ஆம் திகதி நாட்டின் மூன்றாவது ஜனாதிபதியாக பதவியேற்றார்.

இந்த தேர்தல் முடிவை எதிர்த்து நெல்சன் சாமிசாவின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்தனர். வன்முறையாக மாறிய இந்த போராட்டத்தை ஜனாதிபதி  எம்மெர்சோன் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கினார். பாதுகாப்பு படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் வெடித்த மோதலில் 6 பேர் கொல்லப்பட்டனர். இதில் உடல்நலம் பாதிக்கப்பட்ட ரொபர்ட் முகாபே சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தற்போது சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

நவம்பர் 2017 இல் முகாபே பதவியில் இருந்து விலகிய பின்னர், அவரது புகழ்பெற்ற உடல் சகிப்புத்தன்மை நீங்கியது போல் தோன்றியமை குறிப்பிடத்தக்கது

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top