Business

தந்தையின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக சென்ற சகோதரிகள்… 34 பேருடன் தீயில் கருகிய சோகம்

லாஸ் ஏஞ்சல்ஸுக்கு அருகே ஏற்பட்ட கப்பல் விபத்தில் தந்தையின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக சென்ற மூன்று சகோதரிகளும் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

கலிஃபோர்னிய கடற்கரையிலிருந்து சாண்டா குரூஸ் தீவுக்கு அருகே உள்ள கடற்கரையில் கடந்த திங்கட்கிழமையன்று வணிகக்கப்பல் ஒன்றில் அதிகாலை திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தின் போது கப்பலில் இருந்த 5 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டனர்.

 

 

அதிலும் ஒருவருக்கு பலத்த காயமடைந்து. மற்ற 34 பேர் தீயில் கருகி பலியாகினர். அவர்களுடன், தந்தையின் பிறந்தநாளை கொண்டுவதற்காக சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

வார இறுதியில் தந்தையின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக ஏஞ்சலா, நிக்கோல் மற்றும் இவான் குயிட்டசோல் என்கிற மூன்று சகோதரிகள் தங்களுடைய தந்தை மைக்கேல் மற்றும் அவர்களது வளர்ப்பு அம்மா ஃபெர்னிசா சீசன் உடன் கப்பலுக்கு சென்றுள்ளனர்.

அவர்களின் இந்த தீ விபத்தில் உயிரிழந்திருப்பதாக அதிகாரிகள் தற்போது தகவல் வெளியிட்டுள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top