News

தந்தை உட்பட குடும்பத்தவர்கள் ஐவரை சுட்டுக்கொன்ற 14 வயது சிறுவன்- அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்

அமெரிக்காவில் 14 வயது சிறுவன் ஒட்டுமொத்த குடும்பத்தையும் சுட்டுக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அலபாமாவின் எல்க்மொன்ட் என்ற சிறிய நகரத்தை சேர்ந்த 14 வயது சிறுவன் தன்னுடைய வீட்டில் துப்பாக்கி சூடு நடந்திருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளான்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு பொலிஸார் சென்ற போது மூன்று பேர் இறந்து கிடந்துள்ளனர். மற்ற இரண்டு பேர் மட்டும் படுகாயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்துள்ளனர். அவர்கள் இருவரையும் மீட்டு வேகமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது பாதிவழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

 

 

இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக 14 வயது சிறுவனிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்ட போது, 38 வயதான தந்தை ஜான் சிஸ்க், அவரது 35 வயது மாற்றாந்தாய் மேரி, அவரது 6 வயது சகோதரர், 5 வயது சகோதரி மற்றும் 6 மாத சகோதரர் ஆகியோரை தான் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.

மேலும், சட்டவிரோதமாக வாங்கப்பட்ட துப்பாக்கியை அப்பகுதியில் தூக்கி வீசியதாகவும் கூறியுள்ளார். இந்த நிலையில் துப்பகையை கைப்பற்றியுள்ள பொலிஸார், துப்பாக்கிச் சூட்டுக்கான நோக்கம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், 14 வயது சிறுவன் தற்போது சிறார் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top