News

திலீபனின் படத்துடன் தொடங்கியது நடைபயணம்!

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கு, சிங்கள குடியேற்றங்களை நிறுத்து, அரசியல் கைதிகளை விடுதலை செய், இன அழிப்பு, காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டறிய சர்வதேச விசாரணையை நடத்து போன்ற கோரிக்கைகளை முன்வைத்து, வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிய நடைபயணம் இன்று காலை ஆரம்பமானது.

 

 

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞரணியின் ஏற்பாட்டில். இன்று காலை வவுனியா நகரசபை வாயிலில் அமைந்துள்ள பொங்குதமிழ் தூபியிலிருந்து தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தியுடன் ஆரம்பமாகிய நடை பயணம், நல்லூரில் அமைந்துள்ள தியாகி திலீபனின் நினைவு திடலை சென்றடையவுள்ளது.

 

 

முன்னதாக ஊர்தியில் அமைக்கபட்டிருந்த திலீபனின் திருவுருவ படத்துக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் மலர் மாலை அணிவிக்கப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ,கஜேந்திரன், சட்டத்தரணி சுகாஸ், உறுப்பினர்கள், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் செ.மயூரன், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து‌ கொண்டிருந்தனர்.

 

 

நடைபயணம் வவுனியா மணிக்கூட்டு கோபுர சந்தியை தாண்டி பஜார் வீதியை நெருங்கிய வேளை ஊர்வலத்தை தடுத்த பொலிஸார் ஒலிபெருக்கி பாவனையை நிறுத்துமாறு உத்தரவிட்டனர். இதனால் சற்று நேரம் குழப்பம் ஏற்பட்டிருந்தது. ஒலி பெருக்கி பாவனை இல்லாமல் பயணத்தை மேற்கொள்ளுமாறு, பொலிஸாரால் பணிக்கப்பட்டது. அதன்பின்னர், புதிய பஸ் நிலையம் வரைக்கும் ஒலிபெருக்கி பாவனை இல்லாமல் நடைபயணம் தொடர்ந்திருந்தது

Latest News

To Top