News

தேர்தலை புறக்கணித்ததால் மஹிந்த ஜனாதிபதி ஆனார்!

ஜனநாயக முறைமையான தேர்தல்களில் தமிழர்கள் பங்கேற்க வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். 2005ஆம் ஆண்டில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் நாம் வாக்களிப்பில் பங்கேற்காமையால் தான் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியானார்.

அடிப்படையில் நோக்குகின்ற போது அன்று தமிழர்களே மகிந்தவை ஜனாதிபதியாக்கியுள்ளார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணலிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

தமிழர்கள் வாக்கெடுப்பில் பங்கேற்றிருந்தால் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகியிருப்பார். அன்று ஆயுத ரீதியான பலத்துடன் எமது மண்ணில் சம வலிமையுடனும் நாம் இருந்தோம். அத்துடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது ரணில் பின்கதவால் கருணாவை பிளவுபடுத்திய காலமாகவும் இருந்தது.

இதனால் தான் அன்று வாக்கெடுப்பினை புறக்கணிக்க வேண்டி ஏற்பட்டது. அவ்வாறிருக்க தற்போதைய தேர்தலில் தமிழர்கள் பங்கேற்காது விட்டால் கோத்தபாய ராஜபக்ச ஆட்சியில் அமரும் நிலைமைதான் இருக்கின்றது.

இனப்படுகொலையாளியை எம்மீது போர்க்குற்றங்களை புரிந்தவரை வாக்களிக்காமலேயே தெரிவு செய்கின்ற கைங்கரியத்தினை செய்ய முடியாது என தெரிவித்துள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top