News

 நெதர்லாந்தில் மொத்த குடும்பத்தையும் சுட்டு கொன்ற காவல்துறை அதிகாரி..

 நெதர்லாந்தில் காவல்துறை அதிகாரி ஒருவர் மொத்த குடும்ப உறுப்பினர்களையும் துப்பாக்கியால் கொன்று குவித்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
 குறித்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மூவர் கொல்லப்பட்டதாகவும், ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
 தமது குடும்ப உறுப்பினர்கள் இருவரை துப்பாக்கியால் கொன்ற அந்த நபர், பின்னர் தன்னைத்தாமே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
 இதில் நான்காவது நபர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருவதாக கூறப்படுகிறது  நெதர்லாந்தின் Dordrecht பகுதியில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
குடும்ப பிரச்னை காரணமாகவே இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.  உணமையான தகவல் முழு விசாரணைக்கு பின்னரே தெரியவரும் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top