News

பிரித்தானியாவில் இருந்து சென்ற மஹிந்தவின் நெருங்கிய சகாவான தமிழர் முறிகண்டியில் மரணம்

முல்லைத்தீவில், மாங்குளம் பொலிஸ் பிரிவின் முறிகண்டி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் புலம்பெயர்ந்த பிரித்தானிய தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து இன்று பிற்பகல் 4.40 மணியளவில் கிளிநொச்சியில் அமைந்துள்ள யாழ். பல்கலைக்கழக வளாகத்தின் பிரதான வீதிக்கு அண்மையில் ஏ9 வீதியில்    இடம்பெற்ற வீதி விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியாகியுள்ளார்.

 

 

குறித்த நபர் கிளிநொச்சி மாவட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்தராஜபக்சவின் செயற்பாட்டாளராக இருந்த தீபன் என அழைக்கப்படும் லண்டன் பிரஜை என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவரின் உடல் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை வைக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியிலிருந்து முறிகண்டி நோக்கிச் சென்ற தனியார் பயணிகள் பேருந்தும் கொழும்பிலிருந்து கிளிநொச்சிக்குச் சென்ற தீபனின் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

 

 

தனியார் பேருந்தின் வலது பக்கமாக மோதியுள்ள நிலையில் தீபனின் வாகனத்துக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. சாரதி ஆசனத்தில் அமர்ந்திருந்த அவரை வெளியில் எடுப்பதற்கு நீண்டநேரம் போராட வேண்டியிருந்ததாக சம்பவ இடத்தில் இருந்தவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து இரும்பு கடப்பாரைகள் கொண்டு வாகனத்தின் கதவு, மற்றும் முன்பகுதிகளை அப்புறப்படுத்தியே தீபனின் உடலை வெளியே எடுத்தனர். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் உயிரிழந்தவரின் உடல் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை வைக்கப்பட்டுள்ளது

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top