News

பிலிப்பைன்ஸில் 2 லட்சம் பேர் டெங்குவால் பாதிப்பு

பிலிப்பைன்ஸ் நாட்டின் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா அறிக்கை தகவல் வெளியிட்டுள்ளது.

பிலிப்பைன்ஸ் நாடு டெங்கு நோயால் கடும் பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றது.

இந்த ஓராண்டில் மட்டும் 2,29.736 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் 958 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் ஐ.நா அறிக்கை தகவல் வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை ஜனவரி (2019) முதல் ஒகஸ்ட் 17 ஆம் திகதி வரையில் எடுக்கப்பட்டதாகும்.

இதேபோல் கடந்த 2018ஆம் ஆண்டும் பிலிப்பைன்ஸ் நாட்டில் 1,10,970 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 582 பேர் உயிரிழந்துள்ளனர். டெங்கு பாதிப்பு குறிப்பாக 5 முதல் 9 வயது வரையிலான குழந்தைகளையே அதிகம் தாக்கியுள்ளதுமை குறிப்பிடத்தக்கது.

கடந்த ஒகஸ்ட் 6ஆம் திகதி டெங்குவை தேசிய தொற்றுநோயாக அறிவித்த பிலிப்பைன்ஸ் இதன் மூலம் சர்வதேச உதவியும் கிடைக்கும் என எதிர்பார்க்கின்றது.

இதேவேளை, உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சர்வதேச அளவில் ஒவ்வொரு ஆண்டும் டெங்குவால் சுமார் 5 லட்சம் பேர் பாதிக்கப்படுவதாகவும் அவர்களுள் 12,500 பேர் உயிரிழப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top