News

போர்க்குற்றம் தொடர்பில் கண்டிப்பாக விசாரணைகளை வேண்டும்! மேஜர் ஜெனரல் அசோக்

இலங்கையின் புதிய அரசாங்கம் சுமத்தப்படும் போர்க்குற்றம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என இலங்கையில் நிலைகொண்டிருந்த இந்திய அமைதிப்படையின் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் அசோக் மேஹ்டா கோரியுள்ளார்.

அத்துடன், உள்ளூர் விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என கூறியுள்ள அவர், நல்லிணக்க நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்

இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர், “உள்ளுர் விசாரணைகளையா? அல்லது வெளிநாட்டு விசாரணைகளையா? மேற்கொள்வது என்பது தொடர்பில் அரசாங்கம் தீர்மானிக்கவேண்டும். எனினும் அதற்கு முன்னர் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் ஏற்றுக்கொண்ட கொள்கைகளை அது நடைமுறைப்படுத்தவேண்டும்.

தமிழர்களுடைய பிரச்சனைகள் தீர்க்கப்படவேண்டும். அதன் பின்னர் தமிழர்களை வெல்லக்கூடிய வகையில் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படவேண்டும்.  காணாமல் போனோர் அலுவலகம் திறக்கப்பட்டமை வரவேற்கத்தக்கது. எனினும் அதன் செயற்பாடுகள் தொடரவில்லை.

இந்தநிலையில் அரசாங்கம் 2015ம் ஆண்டின் ஐக்கிய நாடுகள் பரிந்துரைகள் தொடர்பில் செயற்படவேண்டும். எனினும் அவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறவில்லை

. புதிய இராணுவத்தளபதி சவேந்திர சில்வா உட்பட்ட போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள அனைவர் தொடர்பிலும் புதிய அரசாங்கம் விசாரணைகளை நடத்தவேண்டும்.

இந்தநிலையில் இலங்கையில் விடுதலைப்புலிகளுடனான போரின்போது 12 ஆயிரம் இந்திய வீரர்கள் மரணமாகி 5000 பேருக்கு காயங்கள் ஏற்பட்டன. இந்த அர்ப்பணிப்பு இலங்கையின் இறைமையை பாதுகாப்பதற்காக என்பதை அனைவரும் ஏற்கவேண்டும் என்று மேஹ்டா தெரிவித்தார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top