News

மாவீரரின் தீரமிகு போராட்டத்தை அனைவரும் மறந்து போனோமா?

இப்போது தென்னிலங்கை யிலே யார் வேட்பாளர்கள் என்ற பிரச்சினைக்கு அப்பால் அவர் கள்தமிழர்களின் நாடிபிடிக்கிறார் கள். கோட்டாபய கேட்கிறாரா, அல்லது சஜித் கோட்கிறாரா, இன்று காலையில் இருந்து ரணில் விக்கிரமசிங்க கேட்கிறாரா, ஜே.வி.பியின் அனுரகுமார திஸ நாயக்க கேட் கிறார் என்பதல்ல அவர்களின் பிரச்சினை. தமிழர் கள் யாருக்கு வாக்களிக்கிறார் கள் என்பதைத்தான் அவர்கள் பார்கிறார்கள்.

– வரணி இடைக்குறிச்சி மேற்கு நவா சனசமூக நிலையத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் பிரதமவிருந்தினராக சிவஞானம் சிறிதரன் கலந்துகொண்டு உரை யாற்றும் போதே இவ்வாறு கருத் துத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் கூறி யவை வருமாறு: –

அபிவிருத்தி சம்பந்தமானவிட யங்களைத்தான் நாங்கள் எல் லோரும் இப்போது கதைக்கிறோம். ஆனால் எங்களுடைய பிரச் சினைக்குத் தீர்வு இருக்கிறதா? சுதந்திரமான வாழ்க்கை வாழ் கிறோமா? நாங்கள் எல்லாரும் நிம்மதியாக இருக்கிறோமா? எம்மைச் சுற்றியார் இருக்கிறார் கள்? ஏனையவர்கள் என்ன கதைக்கிறார்கள்? இதைப்பற்றி யாரும் இப்போது சிந்திப்பது இல்லை . இங்கு ஏன் போரட்டம் நடந்தது? எத்தனை பேர் இரத்தம் சிந்தி னார்கள்? எத்தனைமாவீரர்களை இழந்திருக்கிறோம்? எத்தனை பேர் தங்களை இந்தப்போராட்டத் திற்காக அர்ப்பணித்தார்கள்? இவ்வாறு எல்லாம் நாம் கடந்து வந்த விடயங்களை மறந்து விட் டோமா? இப்பொழுது எமது மனங்களில் இருந்து மெல்ல மெல்ல எமது உரிமைகள் பற்றிய சிந்தனை மெல்லத் தூக்கி எறி யப்பட்டுக் கொண்டே போகிறது.

நாங்கள் இப்போது சின்னச் சின்னக் குழுக்களாக, சின்னச் சின்னசமூகங்களாகவேறுபட்டுப் போய் இருக்கிறோம், அதனை அரசாங்கமோ, பேரினவாதிகளோ திட்டமிட்டுச் செய்து கொண்டு இருக்கிறார்கள். ஏனென்றால் பலமாக, ஒற்றுமையாக நாங் கள் எல்லோரும் நின்றால் அவர் களால் எம்மை ஒன்றும் செய்ய முடியாது. எங்களை அவர்கள் ஏமாற்று கிறார்கள். மாறி, மாறி வந்த அர சாங்கங்கள் எல்லாம் – மாறி, மாறி வந்த தேசியக் கட்சிகள் எல்லாம் – எங்களது இனத்தின் மீது சவாரி விடுவதிலேயே கவ னம்செலுத்துகின்றனவே ஒழிய, எமது பிரச்சினையைத் தீர்த்துத் தமிழர்களுக்கு ஒரு சுயாட்சி வழங்குவதில் அவர்கள் எந்தக் கரிசனையும் கொண்டிருக்க வில்லை .

எங்களுக்கு என்று ஒருசுயாட்சி இருந்திருந்தால், நாங்கள் சுதந்திரமாக வாழுகின்ற உரிமை யைக்கொண்டிருந்தால், 2004 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளால் கொடுத்திருந்த இடைக் காலத் தன்னாட்சி அதிகார சபையைக்கூட இந்த அரசாங்கம் வழங்கியிருந்தால், இன்று இந்த வீதிகள் எல்லாம் காபெற் வீதி களாக இருந்திருக்கும்.

எமது உற்பத்திகள் வெளி நாடுகளுக்குப் பறந்திருக்கும். யாருக்காகவும் காத்திருக்கவேண்டி இருந்திருக்காது.

வீதிகளைத் திருத்த முடியாமல், பாடசாலைகளை வளப்படுத்த முடியாமல், நாங்கள் நிதிளைத் தேட முடியாமல் திணறுகிறோம், இதற்காகத்தான் நாங்கள் போரடி னோமா?

இப்போது தென்னிலங்கை யிலே யார் வேட்பாளர்கள் என் பதற்கு அப்பால் அவர்கள் தமிழர் களின் நாடி பிடிக்கிறார்கள்.

தமிழர்கள் யாருக்கு வாக்களிக் கிறார்கள் என்பதை அவர்கள் பார்க்கிறார்கள். தென்பகுதி சிங்கள மக்களது வாக்குகள் சமனாகப்பகிரப்படும். அப்படி அவர்களின் வாக்குகள் சமமாகப்பகிரப்பட்டால்51ஆவது வீதமாகப்பெரும்பான்மையைத் தீர்மானிக்கும் சக்தியாகத் தமிழர் கள் இருக்கப்போகிறார்கள், அத் னால் தமிழர்களுடைய வாக்கு களை வசீகரிப்பதற்காக பல்வேறு பட்டதரப்புக்களை அனுப்புகிறார் கள்.

நேற்று முன்தினம்கூடகுருநா கல் மாவட்டத்தில் சஜித் பிரேமதா ஸவை வரவேற்கும் நிகழ்வில், இந்நாட்டின்டிஜ்ஜிடல் இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க குறிப்பிட்டிருக்கிறார். இந்த நாட் டிலேஐ.தே.கட்சியை அழித்ததில் தலைவர் பிரபாகரனுக்கும் தமி ழீழ விடுதலைப் புலிகளுக்கும் தான்பெரிய பங்கிருக்கிறது என்று. நான் நினைக்கிறேன் சுஜீவ சேனசிங்கவுக்கு அரசியல் அறிவு காணாது. அவர் எங்கே அரசியல் படித்தார் என்று தெரியாது. அவர் இப்போதுதான் அரசியலுக்கு வந்திருக்கிறார், அவர் முதலில் அரசியல் படிக்க வேண்டும்.

இந்தநாட்டில் முதலில் அகிம்சை ரீதியாகத்தான் தமிழர்கள் போராடி னார்கள். காலிமுகத்திடலிலே அமிர்தலிங்கத்தின் மண்டையை அடித்து உடைத்தவர்கள் சிங்களக் காடையர்கள். தந்தை செல்வா அறவழியிலே போராடிய போது அவரைக் காயப்படுத்தி உதா சீனம் செய்தவர்களும் சிங்களக் காடையர்கள்தான்.

இதே ஐக்கிய தேசியக்கட்சியைச் சேர்ந்தவர்கள்தான் அன்றுயாழ்ப் பாண நூலகத்தை எரித்தார்கள். இந்த சுஜீவ சேனசிங்கவின்பாட் டன், பேரன், தகப்பனார்கள்தான் இந்த நூலகத்தைக் கொளுத்தி னார்கள். சுஜீவ சேனசிங்கவின் பாட்டன், பேரன், தகப்பனார்கள் தான் எமது மண்ணிலே மக் களைக் கொலை செய்தார்கள், எண்பத்துமூன்றிலேமிகப்பெரும் இனப்படுகொலைகளை கட்ட விழ்த்து விட்டார்கள். பிரச்சினை களுக்கான தீர்வுகள் எட்டப்படு கின்ற போதெல்லாம் இந்த மக் களை அழித்தொழிப்பதிலும் மூடி மறைப்பதிலும் கூடிய பங்கெடுத் தார்கள். இப்பொழுது தங்களுக்கு ஒரு பதவி கிடைக்கவில்லை என் பதற்காக, அல்லது தங்களுக் குள்ளே உள்ள உட்கட்சிப்பூசலை மூடிமறைக்கத்தெரியாமல், சஜித் பிரேமதாஸவுக்கும் ரணிலுக்கும் இடையில் உள்ள உள்ளகமுரண் பாடுகளை தீர்க்கமுடியாமல், எதிர் காலத்திலேதாங்கள் ஒருகபினட் அமைச்சராக வரவேண்டும் என்கிற கனவோடு இருக்கின்ற சுஜீவ சேனசிங்க போன்றவர்கள் பாவிக்கின்றபொருள்தான் இன வாதம்.

இந்த இனவாதம் எப்படிப்பாவிக் கிறார்கள் என்றால் தலைவர் பிர பாகரன், விடுதலைப் புலிகள்

யார் தோற்றுவித்தார்கள்? புலி களையார்தோற்றுவித்தார்கள்? இதற்கான காரணம் என்ன? இதற்கான காரணம் எல்லாமே ஐக்கிய தேசியக் கட்சிக்குள்தான் அடங்கியுள்ளது. இதற்கொல்லாம் காரணம் அவர்கள்தான், ஆணைப்பெண் ணாகவும் பெண்னை ஆணாக வும் மாற்றுவதைத் தவிர மற்ற தெல்லாவற்றையும் செய்வேன் என்று கூறி இலங்கையிலே நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்டு வந்த ஜே.ஆர்.ஜெய வர்த்தனவுடையவாரிசுகள்தான் இவர்கள்.

ஆகவே எமது இனம் அழிக்கப் பட்டபொழுது, எமது இனம் வாழ முடியாது என்ற போதுதான் எங்களது இளைஞர்கள் துப்பாக்கி தூக்க வேண்டிய அல்லது துப் பாக்கி பற்றிய சிந்திக்க வேண்டிய சூழல் உருவாக்கப்பட்டது.

இவர் குறிப்பிடுவது போல அவர்களது தலைவர்களை அழிக்க வேண்டிய நோக்கமோ அல்லது அதற்கான தேவையோ எமக்கு இருக்கவில்லை . எங்களைப் பொறுத்தவரை எங்களது பிரச் சினையை தீர்ப்பதற்காகப் போரா டினோம் , அறவழியிலும் அகிம்சை வழியிலும் நாங்கள் போராடிய பொழுது நாங்கள் அழிக்கப் பட்டோம், தாக்கப்பட்டோம், கொல் லப்பட்டோம், நாங்கள் இன ரீதி யாகப்படுகொலை செய்யப்பட்டோம்.

ஆகவே தான் நாங்கள் துப் பாக்கிகளுக்குள் புகுந்துகொள்ள வேண்டிய அல்லது துப்பாக்கி ஏந்த வேண்டிய கட்டாயம் ஏற்பட் டது. இதனை அவர் சரியாக விளங்கிக் கொள்ள வேண்டும், புரிந்து கொள்ள வேண்டும்.

அந்தப்புரிதல் இல்லாத சுஜீவ சேனசிங்க போன்றவர்கள் ஒரு மாற்றுக் கருத்துக்களை சொல் லுகின்றபொழுது சிந்திக்கவேண் டும். எவ்வாறு தமிழ் மக்களது வாக்ககளை பெற முனைகிறார் கல்? பிரபாகரனை அல்லது தழிழீழ விடுதலைப் புலிகளை காரணம் என்று சொல்லி விட்டு பிறகு தமிழ்மக்களின் வாக்குகள் வேண்டும் எனக் கேட்டால் அது எவ்வகை நியாயமாக இருக்கும்.? முதலிலே அவர்கள் தமது கருத் துக்களை இனரீதியாக இல்லாமல் யதார்த்தத்தை உணர்ந்து சொல்ல வேண்டும் என்பதே தமிழ் மக் களது எதிர்பார்ப்பு. சிங்களம் இன்னும் அடிப்படை பௌத்த பேரினவாத சிந்தனை யில் இருந்து மாறவில்லை . புதிதாக முளைத்து வளருகின்ற சுஜீவ சேனசிங்கபோன்ற இளைய தலைவர்களிடம் அது இன்னும் குடி கொள்கிறது. சிங்கள் மக் களிடம் இன்னமும் அவர்கள் இனவாதம்சொல்லத்தான் விரும் புகிறார்கள். தமிழர்களுக்காகயார் போராடினார்களோ அவர்களை எதிர்ப் புலிகளாக காட்டத்தான் முனைகிறார்கள். சிங்களம் எப் பொழுதும் எங்களை அழிப்பதற் காக, இனவாதத்தைப் புகுத்தி எங்களை இல்லாமல் செய்வதற் காக, சிங்கள மக்களிடம் இன் வாத்தைதொடர்ந்தும் விதைத்துக் கொண்டே இருப்பார்கள்.

இந்த நிலையிலேதான் நாம் ஒரு தேசிய இனமாக இந்த மண் ணிலே எமது அடையாளத்தை இழந்து போகாமல் நாங்கள் மனி தர்களாக வாழுகின்ற பக்குவத் தைப் பெற வேண்டும். இந்த வகையில் அபிவிருத்தி என்பது எமது இனத்துக்கான விடிவினைத் தந்து விடாது, ஆனால் அதுவும் தேவை. இதற்கும் அப்பால் நாம் தொடர்ந்தும் இன விடுதலைக் காகப் போராடிக் கொண்டிருக் கிறோம் என்பதையும் மறந்து விடக் கூடாது. – என மேலும் அவர் தெரிவித்தார்.

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top