News

வடக்கில் மட்டுமல்ல தெற்கிலும் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்: சம்பிக்க

வடக்கில் மட்டும் மக்கள் படுகொலை செய்யப்படவில்லை. தெற்கிலும் ஏராளமான இளைஞர், யுவதிகள் படுகொலை செய்யப்பட்டார்களென அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மாநகர சபை மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்டு, கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சம்பிக்க மேலும் கூறியுள்ளதாவது, “யுத்தக் காலத்தில் தமிழர்கள் டொறென்றோவிற்கும் சிங்களவர்கள் அவுஸ்திரேலியாவிற்கும் சென்றார்கள்.

இவ்வாறு பிரச்சினைகளுக்கு பயந்து வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வது தீர்வல்ல.

மேலும் வடக்கிலுள்ள மக்கள் படுகொலை செய்யப்பட்டதைப் போன்று தெற்கிலுள்ள மக்களும் படுகொலை செய்யப்பட்டனர் என்பதை எவரும் மறக்க கூடாது.

இதேவேளை ஆளுநர் இங்கு உரையாற்றும்போது, தேர்தலையோ அரசியலையோ அடிப்படையாக கொள்ளாமல், அபிவிருத்தி செய்யப்பட வேண்டுமென தெரிவித்திருந்தார்.

உண்மையாகவே நாம்  தேர்தலை நோக்கமாக கொண்டு, எந்தவித குறுகிய சிந்தனைகளுடனும் இந்த அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கவில்லை.

நாம் ஆட்சிக்கு வந்தது முதல் அபிவிருத்தியை நோக்காக கொண்டே செயற்பட்டு வருகின்றோம்.

மேலும் இந்த கட்டடத்தை அமைக்க வேலைத் திட்டங்களை ஆரம்பிக்க முன்னர் நான் இங்கு வருகை தந்திருந்தேன். இங்குள்ள அதிகாரிகள் அனைவரையும் இணைத்து அவர்களின் கருத்துகள், அபிப்பிராயங்கள் எல்லாம் கேட்ட பின்னரே இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது” என குறிப்பிட்டார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top