Canada

வட யோர்க்கில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம்

வடக்கு யோர்க்கில் ஞாயிற்றுக்கிழமை இரவு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. இச் சம்பவம்  லெஸ்லி ஸ்ட்ரீட் மற்றும் பிஞ்ச் அவென்யூவுக்கு அருகிலுள்ள ட்ரீ ஸ்பாரோவேயில்[Tree Sparroway] இரவு 11 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது .
 சம்பவ இடத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கான ஆதாரங்கள் கிடைத்ததாக பொலிசார் கூறுகின்றனர், ஆனால் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. ஷெல் கேசிங்ஸ்   மற்றும் அருகிலுள்ள கட்டிடத்தில் புல்லட் துளை ஒன்றும் காணப்பட்டது  என பொலிஸார் தெரிவித்தனர் .
சாத்தியமான சந்தேக நபர்கள் குறித்து பொலிசார் எந்த தகவலையும் வெளியிடவில்லை .ட்ரீ ஸ்பாரோவேயில் [Tree Sparroway] நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் சரியாக இரண்டு வாரங்களுக்குப் பிறகு இடம்பெற்றுள்ளது, அதில் இரண்டு பேர் காயமடைந்தனர்.
நடந்த இரண்டு துப்பாக்கிச் சூடு  சம்பவங்களும் ஒன்றோடு ஒன்று தொடர் உள்ளதா என்று போலீசார் கூறவில்லை.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top