இஸ்ரேல் அமெரிக்காவை வேவுபார்த்தது என எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை அந்த நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு மறுத்துள்ளார்.

வெள்ளை மாளிகைக்கு அருகில்  வேவுபார்க்கும் சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்திற்கும் இஸ்ரேலிற்கும் தொடர்பிருக்கலாம் என முன்னாள் சிரேஸ்ட அமெரிக்க அதிகாரிகள் மூவர் தெரிவித்துள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.

பொலிட்டிகோ என்ற செய்தி இணையத்தளம் இதனை வெளியிட்டுள்ளது.

மொபைல் தொலைபேசி கோபுரங்கள் போல செயற்படக்கூடிய சாதனங்கள் வெள்ளை மாளிகைக்கு அருகிலும் வோசிங்டனில் உள்ள முக்கிய கட்டிடங்களிற்கு அருகிலும் டிரம்பி;ன் ஆட்சிக்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டன  என முன்னாள் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சாதனங்கள் தொலைபேசிகளில் காணப்படும் தகவல்களை ஈர்க்ககூடியவை எனவும் முன்னாள் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஸ்டிரிங்ரேய்ஸ் என அழைக்கப்படும் இந்த சாதனங்கள் அமெரிக்க ஜனாதிபதியை வேவுபார்க்கும் நோக்கிலேயே உருவாக்கப்பட்டிருக்கலாம் இந்த முயற்சி வெற்றியளித்ததா என்பது தெரியவில்லை என முன்னாள் அதிகாரிகுறிப்பிட்டுள்ளார்.

இந்த சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து எவ்பிஐ அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டனர் என தெரிவித்துள்ள முன்னாள் அதிகாரி இது இஸ்ரேலின் நடவடிக்கை என்பது மிகவும் தெளிவான விடயம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வேவுபார்க்கும் நடவடிக்கைக்காக இஸ்ரேலை அமெரிக்கா வெளிப்படையாக கண்டிக்கவில்லை எனவும் முன்னாள் அதிகாரி சாடியுளளார்.

இதேவேளை இந்த குற்றச்சாட்டுகளை இஸ்ரேலிய பிரதமர் நிராகரித்துள்ளார்.

அமெரிக்காவை வேவுபார்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை என இஸ்ரேல் நீண்ட கால அர்ப்பணிப்பை கொண்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.