News

158 பேரை இராணுவம் பிடித்திட்டு போய் 29 வருடங்களாகிவிட்டது! கதறும் உறவுகள்

கிழக்குப் பல்கலைக்கழகத்திலிருந்து விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் 29வது ஆண்டு நினைவேந்தல் இன்று வந்தாறுமூலை பல்கலைக்கழக வளாக முன்றலில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீட மாணவர் ஒன்றியம் மற்றும் மட்டக்களப்பு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அமைப்பு இணைந்து ஏற்பாடு செய்த நினைவேந்தலில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

 

 

பல்கலைக்கழக வளாகத்தின் முன் பாதாதைகளை ஏந்தியவாறு தமது உறவுகளுக்கு நீதி கோரி கவனயீர்ப்பு பேராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உறவுகள் மற்றும் மாணவர்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்களை நினைவு கூர்ந்து மௌன இறை வணக்கம் மற்றும் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

1990ம் ஆண்டு நடுப்பகுதியில் அரச படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையிலான போர் உக்கிரமடைந்த நிலையில் உயிர் அபாயம் காரணமாக கிழக்குப் பல்கலைக்கழக முகாமில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் தஞ்சமடைந்திருந்தனர்.

 

 

இதன்போது படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 158 பேர் விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top