News

அவுஸ்ரேலியாவில் பயங்கர காட்டுத்தீ – 30 வீடுகள் சேதம்!

அவுஸ்ரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ காரணமாக 30 வீடுகள் சேதமடைந்துள்ளன.

நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து மாநிலங்களில் வறண்ட வானிலையுடனான காலநிலை நிலவி வருகிறது.

இதன்காரணமாக குறித்த பகுதிகளிலுள்ள புதர் மண்டிய இடங்களில் அடிக்கடி காட்டுத் தீ ஏற்பட்டு வருகின்றது. காற்றின் வேகம் காரணமாக தீ அருகிலுள்ள புதர் பகுதிகளுக்கும் பரவி வருகின்றது.

இதுவரை 40 இற்கும் மேற்பட்ட புதர்கள் தீப்பற்றி எரிந்து வரும் நிலையில், அதனை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு துறையினர் கடுமையாக போராடி வருகின்றனர்.

இதேவேளை, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதுடன், தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Latest News

To Top