News

நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் மீண்டும் அச்சுறுத்தல் விடுக்கும் செயற்பாடு

முல்லைத்தீவு, பழைய செம்மலை, நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் விசேட சாந்தி பூஜை இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது.

இந்நிலையில் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் பெரும்பான்மையினத்தை சேர்ந்த ஒருவர் வழிபாடுகளில் ஈடுபட்டோரை ஒளிப்படம் எடுத்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பொலிஸாருக்கு ஆலய நிர்வாகத்தினர் தெரியப்படுத்திய போதும் அவர்கள் அதனை கவனத்திற்கொள்ளாமல் இருந்துள்ளனர்.

இதனால் புகைப்படம் எடுத்தவருடன், அங்கு இருந்த மக்கள் முரண்பட்டமையினால் சிறிது பதற்றமான நிலைமை ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து அவ்விடத்திற்கு வந்த பொலிஸார், பெரும்பான்மையினத்தைச் சேர்ந்தவருக்கு சார்பாக குரல் பேசியதாகவும் தங்களை விலகிச் செல்லுமாறு வலியுறுத்தியதாகவும் மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் அத்துமீறி தங்கியிருந்த பௌத்த பிக்கு, கடந்த மாதம் மரணமடைந்த நிலையில், அவருடைய உடலை நீதிமன்ற உத்தரவினை மீறி ஞானசார தேரர் தலைமையிலான குழுவினர் மற்றும் சிங்கள மக்கள் இணைந்து ஆலயத்தின் கேணிப் பகுதியில் தகனம் செய்திருந்தனர்.

இந்நிலையில் இந்த துர்சம்பவத்திற்காக, விசேட சாந்தி பூஜை இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest News

To Top