News

மாற்று நடவடிக்கை ஒன்றிற்கு தயாராகும் வட – கிழக்கு தமிழ் கட்சிகள்

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு பெடரல் தீர்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளிட்ட 13 கோரிக்கைகளை வடக்கின் தமிழ் கட்சிகள் முன் வைத்துள்ள நிலையில் அவற்றுக்கு தகுந்த பதில் கிடைக்காத சந்தர்ப்பத்தில் தாம் மாற்று நடவடிக்கை எடுக்கப் போவதாக அந்த கட்சிகள் தெரிவித்துள்ளன.

13 கோரிக்கைகளை வடக்கு, கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவம் படுத்தும் 5 தமிழ் காட்சிகள் முன்வைத்துள்ளன. அதன் அடிப்படையில் தமிழ் மக்கள் கூட்டணி இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தலைமையில் தமிழ் மக்கள் கூட்டணி செயற்படுகிறது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் மேற்கொள்ளவுள்ள தீர்மானம் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கும் முடிவிலேயே தங்கியிருப்பதாக தமிழ் மக்கள் கூட்டணியின் கொள்கை பரப்பு செயலாளர் கந்தையா அருந்தவபாலன் நேற்று யாழ்ப்பாணத்தில் வைத்து தெரிவித்தார்.

அவ்வாறு தீர்வு கிடைக்காத பட்சத்தில் மாற்று வழியாக வாக்களிப்பதை தவிர்ப்பதற்கு வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இல்லை எனின் தமது வாக்கை நிராகரிப்பதற்கு தமிழ் மக்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என இந்த கூட்டணியின் கொள்கை பரப்பு செயலாளர் கந்தையா அருந்தவபாலன் குறிப்பிட்டார்.

வடக்கு, கிழக்கைச் சார்ந்த 5 தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து குறித்த தீர்மானங்களை அண்மையில் யாழ்ப்பாணத்தில் எடுத்திருந்தன.  அந்த தீர்மானங்கள் குறித்து ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு தெரிவிக்க உள்ள நிலையில் இந்த விடயம் குறித்து தற்பொழுது தென் பகுதி ஊடகங்கள் பல கருத்தை முன்வைத்துள்ளன.

வடக்கு, கிழக்கு மாகாணங்களை மீண்டும் இணைத்தல், அதேபோல இந்த இரண்டு மாகாணங்களையும் தமிழர் பூமியாக பிரகடனப்படுத்த வேண்டும், தமிழ் மக்களுக்கு சுயமான தீர்மானங்களை எடுக்கும் உரிமை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் இங்கு முன்வைக்கப்பட்டுள்ளன.

அதேபோல பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்து அதன் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை எவ்வித நிபந்தனைகளும் இன்றி விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ளமை மற்றுமொரு அம்சமாகும்.

முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி, ரெலோ அமைப்பு, ஈ.பி.ஆர்.எல்.எப், இலங்கை தமிழ் அரசு கட்சி மற்றும் புளொட் அமைப்பு ஆகியன இணைந்து இந்த கோரிக்கைகள் 13 முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest News

To Top