Canada

போர்ட் யூனியன் துப்பாக்கிச் சூட்டிற்குப் பிறகு பலத்த காயங்களுடன் பிக்கரிங் வாகன நிறுத்துமிடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒருவர்…

சனிக்கிழமை மாலை போர்ட் யூனியனில் நடந்த துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து பிக்கரிங் வாகன நிறுத்துமிடத்தில் ஒரு வாகனத்தில் துப்பாக்கி சூட்டு காயத்துடன்  ஒருவர்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

போர்ட் யூனியன் சாலை மற்றும் Island  சாலையில் இரண்டு வாகனங்களுக்கு இடையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.  “போர்ட் யூனியனில் இரண்டு வாகனங்கள் பயணித் கொண்டிருந்த போது வாகனத்தில் இருந்தவர்  மற்ற வாகனத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு மேற்கொண்டபின் தப்பி சென்றுள்ளனர் என்று அல்லிசன் டக்ளஸ்-குக் கூறினார்.

பொலிசார் சம்பவ இடத்திற்கு வந்தபோது, ​​சம்பந்தப்பட்ட வாகனங்கள் இப்பகுதியில் இல்லை, ஆனால் ஷெல் கேசிங்  இருந்தன.டர்ஹாம் காவல்துறையினர் தேடுதலின் போது ப்ரோக் ரோடு மற்றும் பிக்கரிங் பார்க்வேயில் ஒரு பிக்கரிங் கனடிய டயர் வாகன நிறுத்துமிடத்தில் ஒரு வெள்ளை செடானைக் கண்டுபிடித்தனர்.

 

 

வாகனத்திற்குள் இருந்தவர் துப்பாக்கிச் சூட்டுக் காயத்தால் பாதிக்கப்பட்டு இருந்தார் அவரை சன்னிபிரூக் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

போலீசார் விசாரிக்கும் போது போர்ட் யூனியன் சாலை இரு திசைகளிலும் மூடப்பட்டுள்ளது. போர்ட் யூனியன் சாலையில் கிழக்கு மற்றும் மேற்கு திசையில் உள்ள வளைவுகள் மூடப்பட்ட ன.

இந்த சம்பவம் குறித்த தகவல்கள் உள்ள   எவரும் பொலிஸ் அல்லது க்ரைம் ஸ்டாப்பர்களை தொடர்பு கொள்ளுமாறு புலனாய்வாளர்கள் கேட்டுக்கொள்கிறார்கள்.

Latest News

To Top