Canada

ஸ்கார்பாரோவில் எரிந்த வாகனத்திற்குள் இறந்து கிடந்த நபர்!

ஸ்கார்பாரோவில்  தீ பிடித்து எரிந்த ஒரு பிக் அப் ரக்  வாகனத்திற்குள் இறந்த ஒருவரை கண்டுபிடித்ததாக டொராண்டோ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பிரிமிலி சாலை மற்றும் புளஃபர்ஸ் பார்க் பகுதியில் ஒரு பிக் அப் ரக் தீ பிடித்து எரிந்துள்ளது . தீயணைப்பு வீரர்களால் தீ அணைக்கப்பட்டபோது வாகனத்திற்குள் இறந்த நிலையில் ஒருவரை  கண்டுபிடித்தனர். இறந்தவரின் வயது அல்லது பாலினத்தை போலீசார் வெளியிடவில்லை.

மரணத்திற்கான காரணத்தைத் தீர்மானிக்க பிரேத பரிசோதனை நடத்தப்படும், மேலும் இந்த சம்பவத்தை “சந்தேகத்திற்குரியது” என்று அவர்கள் கருதுகிறார்கள் என்று போலீசார் கூறுகின்றனர்.

இந்த சம்பவம் குறித்த தகவல் உள்ளவர்கள் போலீசாரை தொடர்பு கொள்ளுமாறு புலனாய்வாளர்கள் கேட்டுக் கொள்கின்றனர்.

Latest News

To Top