இந்தியாவின் புதிய குடியுரிமை திருத்த  சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உத்தரபிரதேசத்தில் இடம்பெற்றுவரும் ஆர்ப்பாட்டங்கள் காரணமாக 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்;தியாவின் பல மாநிலங்களில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுவரும் அதேவேளை உத்தரபிரதேசத்திலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன.

நேற்று ஆர்ப்பாட்டங்களில் பெருமளவு மக்கள் ஈடுபட்டவேளை அவர்களை கட்டுப்படுத்த முயன்ற காவல்துறையினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களிற்கும்இடையில் மோதல்கள் இடம்பெற்றன.

இதன் போது காவல்துறையினர் கண்ணீர்புகை குண்டுவீச்சு மற்றும் தடியடியில் ஈடுபட்டதால் ஐந்து பேர் உயிரிழந்தனர்.

 

 

இதன் காரணமாக காயமடைந்தவர்களில் மேலும் ஆறு பேர் உயிரிழந்துள்ளதை தொடர்ந்து உத்தரபிரதேசத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரி;த்துள்ளது.

மீரூட்டில் ஐந்துபேர் உயிரிழந்துள்ளனர்.வரணாசியில் காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகம் காரணமாக 8 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.

மீருட்டில் கொல்லப்பட்ட ஐந்து பேரின் உடல்களிலும் துப்பாக்கி சூட்டு காயங்கள் காணப்பட்டன என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் முஸ்லீம்கள் என்பது குறிப்பிடத்தக்கது,ஜாஹீர்,மொசின் . நூர் முகமட் ஆகியோரின் உடல்களை நேற்று கொண்டுவந்தனர், அசிவ் என்பவரும் நேற்று உயிரிழந்திருந்தார் இன்று ஒரு அசீவ் உயிரிழந்துள்ளார் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

 

 

காவல்துறை உத்தியோகத்தர் ஒருத்தரும் சிகிச்சை பெற்றுள்ளார் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

வரணாசியில் உயிரிழந்த எட்டு வயது சிறுவனான  முகமட் சகீரின் உடல் இன்று காவல்துறை பாதுகாப்பிற்கு மத்தியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.