News

இனப்பிரச்சினையை தீர்க்கும் வரலாற்று பொறுப்பு பிரித்தானியாவுக்கு உள்ளது! – விக்கி

ஐக்­கிய இலங்­கைக்குள் சமஷ்டிக் கட்­ட­மைப்பை ஏற்­ப­டுத்­து­வதன் மூலம் மனித உரி­மைகள் நிலை­நாட்­டப்­ப­டு­கின்­ற­மையை உறு­திப்­ப­டுத்தி, தமிழர்­களின் பாது­காப்­பையும் நல­னையும் பேணு­வ­தற்கு இன்னும் காலம் பிந்­தி­வி­ட­வில்லை என்று பிரிட்­டனின் பிர­தமர் பொரிஸ் ஜோன்­ச­னுக்கு அனுப்பி வைத்­துள்ள வாழ்த்துச் செய்­தியில் வடக்கு மாகாண முன்னாள் முத­ல­மைச்­சர் சி.வீ.விக்­னேஸ்­வரன் தெரி­வித்­துள்ளார்.

கொன்சர் வேட்டிவ் கட்­சியைச் சோந்த பிர­தமர் பொறிஸ் ஜோன்ச னின் தேர்தல் வெற்­றியை ஒட்டி அவ­ருக்கு அனுப்­பிய வாழ்த்துக் கடி­தத்தில் விக்­னேஸ்­வரன் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது,

“அண்­மைய தேர்­தலில் வென் றமைக்கு எமது வாழ்த்­துக்கள்.

தங்­களின் கொன்­சர்­வேட்டிவ் கட்­சியைச் சேர்ந்த முன்­னைய பிர­தமர் டேவிட் கமரூன் கடை­சி­யாக இலங்­கைக்கு விஜயம் செய்­த­போது அவரைச் சந்­திக்கும் அதிர்ஷ்டம் கிட்­டி­யது. மிக விரை வில் வடக்கு மாகா­ணத்­துக்கு உங்கள் விஜ­யமும் இடம்­பெ­று­கின்­ற­மை­யையும் எதிர்­பார்த்து இருக்­கின்றோம்.

பிரிட்­டனில் வாழும் தமி­ழர்க ளின் உயர்ந்த நண்பர் நீங்கள் என்­பது நாட­றிந்த விடயம். இலங் கையிலும் பிரிட்­ட­னிலும் உள்ள தமி­ழர்கள் உங்கள் மீது நம்­பிக்கை வைத்­துள்­ள­மை­யுடன் உங்க ளிட­மி­ருந்து அதிகம் எதிர்பார்க் கின்­றனர்.

எங்கள் மக்கள் தங்கள் பாரம் பரிய பூமியில் இடம்­பெறும் அரச அடக்­கு­முறை, இரா­ணுவ ஆக்­கிர மிப்பு, சிங்­க­ளக்­கு­டி­யேற்­றங்கள் போன்­ற­வற்­றாலும் அவற்றின் விளை­வு­க­ளி­னாலும் தொடர்ந்து பாதிக்­கப்­பட்டு அல்­லல்­பட்டு வரு கின்­றனர்.

இலங்­கையில் இனப்­பி­ரச்சி னையைத் தீர்த்து, மனித உரிமை மீறல்­க­ளுக்கு முடிவு கட்டும் வர லாற்றுப் பொறுப்பு பிரிட்­ட­னுக்கு உண்டு.

பிரிட்­டனின் கால­னித்­துவ நாடாக்­கப்­பட்­ட­வற்றுள் இலங்கை யும் ஒன்று. 1833இல் இங்கு பிரிட்­டனால் மேற்­கொள்­ளப்­பட்ட நிர்­வாக மாற்­றங்­களே இலங்­கையில் இனப்­பூ­சல்கள் ஏற்­படக் கார ணம் என்­பது பொது­வாக நம்பப் படு­கின்­றது.

அந்தக் காலம் வரை தனி நாடாக இருந்த வடக்கும் கிழக்கும், எஞ்­சிய சிங்­களப் பெரும் பான்மைப் பிர­தே­சத்­துடன் இணைக்­கப்­ப­டாமல் தொடர்ந்து சுய­நிர்­ணய உரி­மை­யுடன் இருக்க அனு­ம­திக்­கப்­பட்­டி­ருக்­கு­மானால் இந்த நாட்டின் இனப்­பூ­சல்­களை நாம் தவிர்த்­தி­ருக்­கலாம்.

ஐக்­கிய இலங்­கைக்குள் சமஷ்டிக் கட்­ட­மைப்பை ஏற்­ப­டுத்து வதன் மூலம் மனித உரி­மைகள் நிலை­நாட்­டப்­ப­டு­கின்­ற­மையை உறு­திப்­ப­டுத்தி, தமி­ழர்­களின் பாது­காப்பு நலனைப் பேணு­வ­தற்கு இன்னும் காலம் கடந்­து­விட வில்லை.

இலங்கைத் தீவில் பொறுப்புக் கூறல், நீதி நட­வ­டிக்கை, மீள் நல்­லி­ணக்கம் ஆகி­ய­வற்றைத் தூண்டித் துலங்கச் செய்­வதற் கான அவ­சி­யத்தை, பிரிட்­டனில் உள்ள தமிழ் மக்­க­ளுக்குத் தேர்த லுக்கு முன்­ன­ரான செய்­தி­யாக நீங்கள் விடுத்­த­மையை நாம் நினைவு கூர­வி­ரும்­பு­கின்றோம்.

இங்கு இடம்­பெற்­ற­வை­யாகக் கூறப்­படும் மனித உரி­மைகள் துஷ்­பி­ர­யோகம் தொடர்­பாக முழு அள­வி­லான சுயா­தீன சுதந்திர விசாரணைகளை நடத்துமாறு 2013இல் இலங்கைக்கு விஜயம் செய்த உங்களின் முன்னாள் பிரதமர் டேவிட் கமரூன் இங்கு இலங்கைக்கு அரசை வலியுறுத் தியமையை நான் இச்சமயத்தில் நினைவூட்ட விரும்புகிறேன்.”

இவ்வாறு அந்தக் கடிதத்தில் நீதியரசர் விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top