இரணைமடுவில் 10 வான் கதவுகள் திறப்பு – தாழ் நிலங்கள் மூழ்கும் ஆபத்து!

வன்னியில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால், இரணைமடு குளத்தின் 10 வான்கதவுகள் இன்று திறந்து விடப்பட்டுள்ளன. 04 வான் கதவுகள் 6 அங்குலம் வரையிலும், 04 வான் கதவுகள் 1 அடி வரையிலும், ஒரு வான் கதவு 1.6 அடி வரையிலும் திறந்துவிடப்பட்டுள்ளதாக நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் குளத்தின் அடைவு மட்டம் தொடர்ந்தும் அவதானிக்கப்பட்டு வருவதாகவும், நீர் வருகை அதிகரிக்கும் பட்சத்தில் வான் கதவுகள் மேலும் திறந்து விடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தாழ்நில பகுதிகளில் உள்ள மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் இடர் முகாமைத்தவ நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.