ஈரானின் புஷெர் அணுமின் உற்பத்தி நிலையத்திற்கு அருகில் 5.1 ரிச்டர் அளவுகோலில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலநடுக்கத்தினால் எவ்வித சேதமும் ஏற்படவில்லையென தெரிவித்த ஆய்வு மையம் ,  ஈரானின் பாரசீக வளைகுடாவின் தெற்கு கடற்கரையில் இருந்து   புஷேர் அணுசக்தி  நிலையத்திற்கு கிழக்கே 53 கிலோ மீற்றர் தொலைவில் 33 மைல் தூரத்தில் இந் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

 

 

அத்தோடு இந் நிலநடுக்கம் அந்நாட்டு நேரப்படி இன்று காலை 5.23 மணிக்கு ஏற்ப்பட்டுள்ளது.

அதேவேளை அணுமின் நிலையத்திற்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லையென அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.