உலகிலேயே மிகச்சிறிய வீட்டினை உருவாக்கிய கனடிய பொறியாளர்

உலகிலேயே மிகச் சிறிய வீட்டினைக் கட்டி கனடா நாட்டு பொறியாளர் ஒருவர் சாதனை படைத்துள்ளார். மெக்மாஸ்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பொறியாளர் ட்ராவிஸ் காசகிராண்டே என்பவர் சிறிய வீட்டினைக் கட்டி சாதனை படைக்க விரும்பினார்.
இறுதியாக மனித தலைமுடியை விட சிறிய வீட்டைக் கட்டியுள்ளார் ட்ராவிஸ். இந்த வீட்டில் கதவுகள் ஜன்னல், நாற்காலிகள், புகைபோக்கி உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் கனடா நாட்டின் தேசியக் கொடியும் பறப்பது போல இந்த வீட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. ஜிஞ்சர் பிரெட் என்று அழைக்கப்படும் வீட்டின் அனைத்து அம்சங்களையும் எலட்ரான் உருப்பெருக்கி மூலம் மட்டுமே காணமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்மஸ்சை முன்னிட்டு தான் இந்த வீட்டினைக் கட்டியதாக ட்ராவிஸ் குறிப்பிட்டுள்ளார்