ஐதேகவுடன் இணைந்து ஆட்சியமைக்கும் கூட்டமைப்பு! – சுமந்திரன்

எதிர்வரும் பொது தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி 113 ஆசனங்களை காட்டுவதற்கான தேவை ஏற்பட்டால் தாம் அவர்களுக்கு ஆதரவு வழங்க தயார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக ஊர்காவற்துறையில் உள்ள கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் சுமந்திரன் பேசியதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை அடுத்த பொதுத் தேர்தலில் நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிக இடங்களைப் பெறும் என்றும் சுமந்திரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழர்களின் உரிமைகள் அதிகாரப் பகிர்வுக்கான ஒரு புதிய முறையை கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவு வழங்குவது குறித்து தீர்மானிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
மேலும் வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் விடயத்தில் தமிழ்த்