ஒட்டாவா பொது போக்குவரத்து பேருந்து தாக்கி பாதசாரி ஒருவர் பலி!

கடந்த வாரம் நடந்த நகரப் பேருந்து பாதசாரி மீது மோதிய விபத்து குறித்து ஒட்டாவாவில் போலீசார் விசாரிக்கின்றனர்.
வெள்ளிக்கிழமை இரவு 11 மணிக்கு முன்னதாக நகரின் மேற்கு முனையில் ஓ.சி. டிரான்ஸ்போ பஸ் ஒரு பாதசாரி மீது மோதியதாக விசாரணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இச் சம்பவத்தில் 53 வயதான பாதசாரதி சம்பவ இடத்தில் இறந்துள்ளார்.
இச் சம்பவம் குறித்து வேறு எந்த விவரங்களையும் போலீசார் வெளியிடவில்லை.