கனடாவில் காட்டில் கண்டெடுக்கப்பட்ட சடலம்

கனடாவில் காட்டுப்பகுதியில் சடலமாக கிடந்த நபர் யார் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கனடாவின் லண்டன் நகரை சேர்ந்த Kyle Retford (29) என்ற இளைஞர் கிறிஸ்துமஸ் தினத்தில் இருந்து காணவில்லை என பொலிசில் புகார் கொடுக்கப்பட்டது.
இது குறித்து பொலிசார் விசாரித்து வந்த நிலையில் நேற்று முன் தினம் தென்மேற்கு பகுதியில் உள்ள காட்டில் இளைஞர் ஒருவரின் சடலம் கிடப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றிய பொலிசார் அந்த இளைஞர் குறித்து விசாரித்து வந்த நிலையில் அது காணாமல் போன Kyle Retford-ன் சடலம் தான் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
Kyle Retford எப்படி உயிரிழந்தார் என்ற விபரத்தை பொலிசார் வெளியிடவில்லை. இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பொலிசார் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.