Canada

கனடாவில் பட்டப்பகலில் வங்கிக்குள் நுழைந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்கள்!

கனடாவில் பட்டப்பகலில் வங்கிக்குள் புகுந்து துப்பாக்கி முனையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை பொலிசார் தேடி வருகிறார்கள்.

Woodstock நகரில் உள்ள ஸ்கோட்டியா வங்கியில் புதன்கிழமை உள்ளூர் நேரப்படி மாலை 3.15 மணிக்கு இரண்டு பேர் கையில் துப்பாக்கியுடன் நுழைந்தனர்.பின்னர் துப்பாக்கியை காட்டி பணம் கேட்டு மிரட்டிய பின் பணத்தை   கொள்ளையடிது சென்றுள்ளனர்.

இதன்பின்னர் சிறிது நேரத்தில் தங்களின் காரில் இருவரும் தப்பி சென்றதாக தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

எவ்வளவு பணம் கொள்ளையடிக்கப்பட்டது என்ற விபரம் இன்னும் தெரியவில்லை. விசாரணை இன்னும் ஆரம்ப கட்டத்தில் உள்ளது என்றும், வேறு எந்த தகவலும் தற்போது வரை கிடைக்கவில்லை என்றும் பொலிசார் கூறுகின்றனர்.

இது தொடர்பில் யாருக்காவது ஏதேனும் தகவல் தெரிந்தால் தங்களை தொடர்பு கொள்ளலாம் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தை தொடர்ந்து அங்கு பதற்றமான நிலை நிலைவியதால், வங்கி மூடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top