கனடாவில் பிரபல இசைக்கலைஞர் வீட்டில் இருந்த போது சுட்டு கொலை

கனடாவில் பிரபல இசைக்கலைஞர் Jahquar Stewart சுட்டு கொல்லப்பட்டுள்ளார். ரொரன்ரோவை சேர்ந்தவர் Jahquar Stewart. இவர் பிரபலமான rap பாடகராகவும், இசைக்கலைஞராகவும் இருந்தார்.
இந்நிலையில் நேற்று முன் தினம் ஒன்றாறியோ மாகாணத்தின் வடக்கு ஒஷாவாவில் உள்ள வீட்டில் Jahquar Stewart இருந்தார். அப்போது அவரை மர்ம நபர்கள் யாரோ துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பியோடியுள்ளனர்.
இது குறித்து தகவலறிந்த பொலிசார் சம்பவ வீட்டுக்கு சென்ற போது அங்கு இரத்த வெள்ளத்தில் Jahquar Stewart சடலமாக கிடந்தார். அவரின் சடலத்தை பொலிசார் கைப்பற்றினார்கள், தற்போது வரை இது தொடர்பில் யாரும் கைது செய்யப்படாத நிலையில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.