Canada

கனடாவில் மோசமான வானிலை எட்மன்டன்-வடக்கு ஆல்பர்ட்டா பகுதி பொது மக்களுக்கு எச்சரிக்கை!

கனடாவின், எட்மன்டன் பகுதிகளுக்கு முக்கிய வானிலை எச்சரிக்கையை சுற்று சூழல் திணைக்களம் விடுத்துள்ளது

கனடாவின், எட்மன்டன்-வடக்கு ஆல்பர்ட்டா பகுதியில் நேற்று நள்ளிரவு முதல் -40 C கடும் குளிர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் இன்று காலை முதல் 10-15 சென்டிமீட்டர் அளவுக்கு பனி சூழ்ந்துள்ளதாக சுற்று சூழல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், பொதுமக்கள் வெளியில் செல்லும் வேளையில் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை மிகவும் கவனமாக கையாளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top