Canada

கனடா உணவகத்தில் அனுமதி மறுக்கப்பட்ட பிரித்தானிய இளவசர் ஹரியும் மேகனும்!

கனடாவின் அமைதியான முறையில் விடுமுறை நாட்களை செலவிடச் சென்றுள்ள பிரித்தானிய இளவரசர் ஹரி குடும்பத்தை கனடா பிரதமரே வரவேற்றுள்ள நிலையில், உணவகம் ஒன்று அவர்களுக்கு அனுமதி மறுத்துள்ளது.

வான்கூவரிலுள்ள அந்த உணவகத்திற்கு முன் பதிவு செய்வதற்காக சென்ற ஹரியின் பாதுகாவலர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.  வான்கூவரிலுள்ள Deep Cove Chalet என்ற உணவகத்தைக் கண்ட ஹரியின் பாதுகாவலர்கள், அந்த உணவகம் ஹரி குடும்பம் உணவு உண்ண பாதுகாப்பானதாக இருக்கும் என்று எண்ணி அங்கு முன் பதிவு செய்வதற்காக சென்றுள்ளனர்.

 

 

அந்த உணவகத்தை நடத்துபவர்கள் கணவன் மனைவியான Pierre மற்றும் Bev Koffel. ஆனால், தனது கணவரான Pierre, ஹரி குடும்பத்தின் வேண்டுகோளை நிராகரித்துவிட்டதாக தெரிவித்தார் Bev.

தங்கள் உணவகம் அமைந்திருக்கும் Horth Hill என்னும் இந்த இடம் தற்போது மிகவும் பிரபலமாகி வருகிறது என்று கூறியுள்ள Bev, இந்த இடத்துக்கு ஹரி குடும்பம் வருவதால் பாதுகாப்பு குளறுபடிகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் அவர்களுக்கு தனது கணவர் அனுமதி மறுத்ததாக தெரிவித்தார்.

தனிமை விரும்பி கனடாவுக்கு வந்துள்ள ஹரி தம்பதி, தெருக்களில் ஜாகிங் செல்வதாகக் குறிப்பிட்டுள்ள Bev, அவர்களை எல்லோராலும் பார்க்க முடியும், எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்று நம்புகிறேன் என்கிறார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top