News

காணாமல் போனவர்களின் உயிரை மீட்டு தரமுடியாது!

காணாமலாக்கப்பட்டவர்களின் பிரச்சினையில் அவர்களின் உயிரை மீட்டுத் தரமுடியாது என இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாயணக்கார தெரிவித்துள்ளார்.கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

கேள்வி: கடந்த யுத்த காலங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் காணாமல் ஆக்கப்பட்டமை, கொலைச் சம்பவங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு நீங்கள் வழங்கும் தீர்வுகள் என்ன?

பதில்: அவை நீடிக்கும் துக்கங்களாகும். காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்து என சொல்லுங்கள், எமது காணிகளை மீள வழங்குங்கள், எமது வாழ்க்கைக்கான தொழிலை நடத்த கடற்படையின் தடைகள் நீக்குங்கள் என்பன அம்மக்களின் கோரிக்கைகளாகும்.

அவற்றுக்கு நாம் முடிந்தளவு தீர்வுகளை வழங்கியுள்ளோம். இறுதியாக காணாமலாக்கப்பட்டவர்களின் பிரச்சினையில் அவர்களின் உயிரை மீட்டுத் தரமுடியாது. அவர்களுக்காக அவர்களது குடும்பத்தாருக்கு உதவிகள் வழங்குகின்றோம் என்று கூறினோம்.” என தெரிவித்துள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top