கிறிஸ்துமஸ் நேரத்தில் தீப்பற்றி எரிந்த தேவாலயம்: அதிர்ச்சியில் மக்கள்!

சுவிட்சர்லாந்தின் பெர்ன் மாகாணத்திலுள்ள தேவாலயம் ஒன்றில் கிறிஸ்துமஸ் நேரத்தில் தீப்பற்றியதால் மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார்கள்.
Herzogenbuchsee என்ற நகரத்தில், இன்று காலை தேவாலயம் ஒன்று தீப்பிடித்தது. அந்த தேவாலயத்தில் இன்று மாலை குடும்ப நிகழ்வு ஒன்றும், கிறிஸ்துமஸ் பார்ட்டி ஒன்றும் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
தேவாலயம் தீப்பற்றியதால் அந்த நிகழ்ச்சிகள் நடைபெறுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தீ விபத்தில், தேவாலயத்தின் கோபுரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன் தினம் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது தங்களுக்கு வருத்தமளிப்பதாக உள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர். தீ ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுவிட்டாலும், முற்றிலும் அணையவில்லை என தெரிகிறது.
தீ எதனால் ஏற்பட்டது என்றோ, எந்த அளவு சேதம் ஏற்பட்டுள்ளது என்பதோ இதுவரை தெரியவில்லை.