கிளிநொச்சியில் உறவுகள் போராட்டம் – அனைவருக்கும் அழைப்பு

அதற்கமைய எதிர்வரும் 30ஆம் திகதி கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் காலை 10 மணிக்கு கண்டன போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பிலேயே இந்த விடயம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல்போனவர்களுக்கு மரண சான்றிதழ்களை வழங்குவதுடன். குடும்பங்களுக்கு நிவாரணங்களை வழங்குவது குறித்து சிந்திக்க முடியுமே தவிர அவர்களை மீளக்கொண்டுவர முடியாதென ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டும் கடத்தப்பட்டும் கையளிக்கப்பட்டும் காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்ததது என சர்வதேசத்திடம் நீதி கோரியும் மேற்கொள்ளப்படும் இவ் மக்கள் எழுச்சிப் பேரணிக்கு மத, சிவில், சமூக மற்றும் கட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என அனைவரையும் பங்குகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.