News

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம்!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று காலை 11 மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை நடத்தினர்.

 

கிளிநொச்சி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்தப் போராட்டத்தில் வடக்கு- கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், அரசியல்வாதிகள், பொது அமைப்புக்கள், பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

 

 

கந்தசுவாமி ஆலயம் முன்பாக ஆரம்பமாகிய ஆர்ப்பாட்ட பேரணி, காக்கா கடை சந்தி வரை சென்று மீண்டும் ஏ9 வீதி வழியாக கந்தசாமி கோயிலை வந்தடைந்தது.

 

 

அதனைத் தொடந்து அங்கு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கண்ணீர் மல்க தமது ஆதங்கங்களை வெளியிட்டனர்.

 

 

 

இந்த போராட்டத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், முன்னார் நாடாளுமன்ற உறுப்பினர்களான வீ.ஆனந்தசங்கரி, சிவாஜிலிங்கம், சுரேஸ் பிரேமச்சந்திரன், செ.கஜேந்திரன், வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர்களான சர்வேஸ்வரன், ஐங்கரநேசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top