செவ்வாய்க்கிழமை பிற்பகல் நார்த் யார்க்கின் ஜேன் மற்றும் பிஞ்ச் சுற்றுப்புறத்தில் சுடப்பட்ட ஒரு ஆண் பலத்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
மதியம் 2:25 மணியளவில் ஜேன் ஸ்ட்ரீட் மற்றும் ஃபிர்கோவ் கிரசெண்டில் உள்ள பிளாசாவின் சுற்றுப்புறத்தில் 18 வயதுடைய இளைஞனர் மீது துப்பாக்கி சூடு நடத்திய சந்தேக நபர்கள் பின்னர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் பாதிக்கப்பட்ட இளைஞனரை சிகிச்சைக்காக trauma க்கு கொண்டு சென்றனர், மற்றும் அவரது நிலை உயிருக்கு ஆபத்தானதாகத் தெரியவில்லை என்று துணை மருத்துவர்களும் தெரிவித்தனர்.
“காட்சியில் நாங்கள் பல ஷெல் கேசிங்ஸைக் கண்டுபிடித்துள்ளோம்,அவை சில குப்பை தொட்டிக்கு அருகிலும் பிளாசாவின் பின்புறத்தில் தரையில் பல ஷெல் கேசிங் காணப்பட்டன. ஒரு ஆண் ஏறக்குறைய 18 வயதுடையவர் துப்பாக்கி சூட்டு காயங்களால் பாதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் பற்றி நாங்கள் இப்போது வீடியோவைப் பார்க்கிறோம். நாங்கள் அருகிலுள்ள ஒவ்வெரு இடமாக சென்று ஆதாரங்களையும் விசாரணைகளும் மேற்கொண்டுள்ளோம் , விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளது என Sgt. Richard தெரிவித்தார்
பொலிஸ் ஆரம்பத்தில் சில்வர் கலர் வாகனத்தில் தப்பி ஓடிய நான்கு ஆண்களைத் தேடுவதாகக் கூறினர். மூன்று சந்தேக நபர்கள் இன்னும் நிலுவையில் இருப்பதாகவும், சந்தேகத்திற்கிடமான வாகனம் நீல, நான்கு கதவுகள் கொண்ட Chevrolet Cruze என்றும் போலீசார் பின்னர் தெரிவித்தனர்
சந்தேக நபர்களில் ஒருவர் கரு நீல நிற ஜாக்கெட் மற்றும் வெளிர் நீல நிற ஜீன்ஸ் அணிந்திருந்தார் என்று ரோவ்ஸோம் கூறினார்