டவுன்டவுனில் மூன்று வாகனங்கள் மோதியதில் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். இரண்டு குழந்தைகள் உட்பட மூன்று பெண்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் இன்று இரவு 9 மணியளவில் லோயர் ஜார்விஸ் தெரு மற்றும் லேக் ஷோர் Boulevard இல் மூன்று வாகனங்கள் மோதிய விபத்தில் அவற்றில் ஒரு வாகனம் கவிழ்ந்ததாகவும் டொராண்டோ போலீசார் தெரிவித்தனர்
இவ் விபத்தில் இரண்டு பெண்கள் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், மற்றொருவர் சிறிய காயங்களுடன் கொண்டு செல்லப்பட்டதாக டொராண்டோ பாராமெடிக் சர்வீசஸ் தெரிவித்துள்ளது.
முன்னெச்சரிக்கையாக இரண்டு சிறார்களும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக துணை மருத்துவர்களும் தெரிவித்தனர்.
மோதலுக்கு என்ன காரணம் என்று இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.