Canada

டவுன்டவுன் எரிவாயு நிலையத்தில் வன்முறை கொள்ளையில் ஈடுபட்ட சந்தேகநபர் கைது

கடந்த கோடையில்  டவுன் ரவுனில்   ஒரு எரிவாயு நிலையத்தை கொள்ளையடித்தது மற்றும் ஒரு ஊழியரை வன்முறையில் தாக்கியதற்கு   காரணமான நபரை  டொராண்டோ பொலிசார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் ஜூன் 13 அன்று அதிகாலை 4:08 மணியளவில் kiosk at Front Street East and Lower Sherbourne Street ஒரு நபர் அவரது முகத்தை மறைத்துக் கொண்டு  ஒரு எரிவாயு நிலைய கடைக்குள் நுழைந்து கத்தியைக் காட்டி கவுண்டருக்கு மேலே குதித்து காசாரளரை மிரட்டி பணத்தை எடுத்துள்ளார்.

அந்த நபர் பின்னர் தரையில் இருந்த காசாரளரை அவர் மயக்கமடையும் வரை காலால் பலமுறை  தலையில்  உதைந்தார்.  பின்னர் சந்தேக நபர் கடையில் இருந்து தப்பி ஓடிவிட்டார்.  காயமடைந்தவரை  மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது ,

காயமடைந்தவருக்கு கண் பாதிப்படைந்துள்ளது, கழுத்து எலும்பு முறிந்துள்ளது , அத்துடன் வெட்டுக்கள் மற்றும் அவரது முகத்தில் காயங்கள்  ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த வாரம் செவ்வாயன்று வெளியிடப்பட்ட செய்தி வெளியீட்டில், டொராண்டோவைச் சேர்ந்த 30 வயதான Ryan Foster  என அடையாளம் காணப்பட்ட சந்தேக நபரைக் கண்டுபிடிக்க டொராண்டோ பொலிசார் பொதுமக்களிடம் உதவி கோரினர்.

திங்களன்று, ஹோல்ட் அப் அணியின் புலனாய்வாளர்கள் ஞாயிற்றுக்கிழமை ஃபாஸ்டரை வெற்றிகரமாக கைது செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

ஃபோஸ்டர் மீது தாக்குதல் ஆயுதத்துடன் இரண்டு எண்ணிக்கையிலான கொள்ளை, கொள்ளை நோக்கத்துடன் மாறுவேடம் இரண்டு எண்ணிக்கைகள், ஒரு ஆயுதத்தை வைத்திருப்பதற்கான இரண்டு எண்ணிக்கைகள் மற்றும் மோசமான தாக்குதல்களுக்கு இரண்டு குற்றச்சாட்டுகள் உள்ளன.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top