Canada

டவுன்ஸ்வியூ பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் கைது

டவுன்ஸ்வியூ பகுதியில் ஞாயிற்றுக்கிழமை   நபர் ஒருவர் கொல்லப்பட்ட ஒரு பயங்கர துப்பாக்கிச் சூடு தொடர்பாக 38 வயது நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

டிசம்பர் 15 அன்று இரவு 11:25 மணியளவில் கீல் ஸ்ட்ரீட் மற்றும் வில்சன் அவென்யூ பகுதியில்  இரண்டு பேர் வாகனத்தில் அமர்ந்திருந்த போது மூன்றாவது மனிதர்அவர்களை நெருங்கி வாகனத்திற்கு வெளியே ஒரு உரையாடல் தொடங்கியது. பின்னர் மூன்றாவது நபர் காருக்குள் இருந்த நபர் மீது துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி சென்றுள்ளார்.

 

 

துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த  நபர்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  அதிகாரிகள் காருக்குள் இருந்து நபர் ஒருவரை துப்பாக்கி சூடுகாயங்களுடன் உயிரிழந்த நிலையில் மிட்டனர்.பின்னர் உயிரிழந்தவர் பிராம்ப்டனில்  வசிக்கும்  38 வயதான Dwight Angus என அடையாளம் காணப்பட்டார்.

இந்த வழக்கில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர்  டிசம்பர் 16 ம் தேதி கைது செய்யப்பட்டதாக செவ்வாய்க்கிழமை இரவு செய்தி வெளியீட்டில் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட  டொராண்டோவைச் சேர்ந்த  Edgar Stalin Brown  மீது இரண்டாம் நிலை கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவர் செவ்வாய்க்கிழமை காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட இருந்தார்என்று போலீசார் தெரிவித்தனர்.

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top