தென்மேற்கு ஒன்ராறியோ முழுவதும் பல வீதிகள் மூடல்!

அத்தோடு, சீரற்ற காலநிலையால் வாகன ஓட்டுநர்கள் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
லண்டன் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு ஒரு பனிப்பொழிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு 25 சென்டிமீட்டர் வரை பனி பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
மேலும், லண்டன் சர்வதேச விமான நிலையத்திற்கு செல்லும் பயணிகள் விமான நிலையத்திற்கு சீக்கிரம் புறப்படுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.